என்னைப் பற்றி!

இந்த பக்கத்தில் (About me), சொல்வதற்க்கு பெரிதாக ஒன்றுமில்லை என்றாலும், வலைப்பதிவு (Blog) கலாச்சாரத்தில், இப்படி ஒரு பக்கம் போடுவது ஒரு சம்பிரதாயமாய் இருப்பதால், வேறு வழியில்லாமல், என்னை பற்றி.. இதோ!

 என்னொட பேரு சரவணன். என்னொட ரொண்டு வயசுல, என் அப்பா தவறிட்டதால, அவருடன் சேர்ந்து வாழ்ந்த அனுபவம் இல்லை. சரி அதுனால என்ன?. பெயரிலாவது சேர்ந்துடுவோம்ன்னு.. என் பெயருடன் அப்பாவின் பெயரையும் சேர்த்து எழுத ஆரம்பிச்சிட்டேன். சரவணன் ராகவன். ஆனால், பெரும்பாலான நண்பர்கள் அழைப்பது, சரண்.

ஏழ்மையில் வளர்ந்ததால், சின்ன வயசுல இருந்து, நிறைய வேலைகள் செய்திருக்கேன். ஆனா, கடந்த 7 வருடங்களாக, Online Marketing Specialist ஆ இருக்குறேன்.

தமிழில் வலைபதிவு எழுதனும்ன்னு அடிக்கடி ஆசை வரும். ஆனா, எழுத முடியாமல் போகும். இதுவும் எவ்வளவு நாள், எழுதுவேன்னு தெரியாது. இதுக்கு முன்னாடியே நான் (saranr.in) என்ற தளத்தில் தமிழில் இணைய தொழில் நுட்பங்களை பற்றி எழுதினேன். ஆனா, அதை ஒரு குழுவா செஞ்சா தான் நல்லா இருக்கும்ன்னு, அதுக்கப்பறம் நிறுத்திட்டேன். இப்போ இது…!

 எழுத்துக்கும் எனக்கும், ரொம்ப தூரம்… சிலபல வருடங்களுக்கு முன், இணையத்தில் பணம் சம்பாதிக்கணும்ன்னுறதுக்காக நிறைய இணையதளங்களை (ஆங்கிலத்தில்) வைத்திருந்தேன். அந்த நேரத்துல தமிழில் சில பேர் வலைப்பதிவு எழுதுறத பார்த்ததால, எனக்கும் இப்படியொரு விபரித ஆசை.

 சரி!, எவ்வளவு தூரம் போகுதுன்னு பாப்போம்!.

 முக்கியமாக, என்னொட வலைப்பதிவை படிக்கிறவர்களிடம் (யாராவது படித்தால்) ஒரு வேண்டுகோள்!. தமிழ் மீது பெரிய மதிப்பும் காதலும் இருந்தாலும், ப்ளாக் எழுதும் போது நிறைய எழுத்துப்பிழை இருக்கலாம். அதனால போன போகுதுன்னு, என்னை மன்னிச்சி விட்டுடுங்க!

 குறிப்பு:- இந்த ப்ளாக்கில், என் அனுபவங்களையும், எண்ணங்களையும், தெரிந்த சிலவற்றையும், பகிர்ந்து கொள்ள ஆசைப்படும் சிலவற்றையும் எழுதலாம்ன்னு இருக்கேன். வேற எதுவும் பெருசா.. எதிர் பார்க்க வேண்டாம்.

© 2017 SaranSays.com. All rights reserved.
Powered by Techbee Web Solutions