அனுபவம்

சின்ன வயசுல நாம ஒவ்வொருத்தரும், பள்ளி சென்று பாடம் படித்திருப்போம். பல வருசம் படித்து முடிச்சாச்சி, இனி எல்லாம் என் கையில் என்று வெளி உலகிற்க்கு வரகிற ஒவ்வொருத்தருக்கும், இந்த உலகம் கற்றுத்தர காத்துகொண்டிருக்கும் பாடங்கள் மிக அதிகம்.

உறவுகள், நண்பர்கள், காதல், திருமணம், குழந்தைகள், சமூகம் அப்படின்னு நிறைய ஆசான்கள் நமக்கு கற்றுக்கொடுக்க காத்திருக்கும் பாடங்கள் ஏராளம். அது தான் வாழ்க்கை பாடம். அனுபவம்….

பள்ளியில் படிக்கும் பாடத்தில் எல்லோருக்கும் ஒரே சிலபஸ், அதே போல ரிசல்ட்டும் வேற வேற. ஆனால், வாழ்க்கை பாடத்தில் அப்படியே தலைகிழ்.

வாழ்க்கையெனும் பாடத்தில் கிளைமாக்ஸ் (ரிசல்ட்) எல்லொருக்கும் ஒன்னு தான்….மரணம். ஆனால் சிலபஸ் ஒவ்வொருவருக்கும் வேறு வேறு.

இப்படியாக, நாம் இவ்வுலகில் ஜனனித்த வினாடி முதல் மரணிக்கும் வினாடி வரை இந்த உலகம் நமக்கான திரைக்கதையை சுவாரஸ்யமாக வைத்திருக்கிறது.

நாம் காணும், பழகும் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு புதிய விடயம் நாம் கற்று கொண்டே இருக்கிறோம். அப்படி வாழ்க்கை எனக்கு கற்று கொடுக்கும் பாடங்கள் தான் இவை…அனுபவம்..

அப்படி நான் மற்றவற்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடிய அனுபவங்களை இந்த வலையில் எழுதி தொகுத்துள்ளவை தான் கீழேயுள்ள பதிவுகள்…

Page 3 of 3123
© 2017 SaranSays.com. All rights reserved.
Powered by Techbee Web Solutions