-
அவமானங்களை எதிர் கொள்வது எப்படி?
ஒரு நாள் சரணானந்தா குருகுலத்தில் தன்னுடைய ஏழு சீடர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். உரையாடலுக்கு நடு நடுவே அவரை காண வந்தவர்கள் வணக்கம் செலுத்தி செல்வதை தலையை அசைத்து வணங்களை ஏற்றுக் கொண்டபடி குருகுலத்தை நோட்டமிட்டு கொண்டிருந்தார்.
சற்று தொலைவில் ஒருவர் மட்டும் மிகவும் சோர்வுடனும், அதே நேரம் மற்றவர்கள் யாரையும் கவனிக்காமல் நிலத்தை பார்த்தவாறே நீண்ட நேரம் அமர்ந்திருப்பதை கண்டார். சீடர்களில் ஒருவரை அழைத்து, யார் அவர்? அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்? என வினவினார். அதற்கு சீடர் “அவரிடம் நான் எவ்வளவோ விசாரித்து பார்த்து விட்டேன். அவர் எதுவும் சொல்வதாக இல்லை. அதே சமயம் இங்கிருந்து செல்லமால் மிகவும் நீண்ட நேரமாக அமர்ந்திருக்கிறார்.” என்று பதிலளித்தார்.
சரி, அவரை நான் அழைத்து வரக் கூறியதாக கூறி அழைத்து வாருங்கள் என சீடரிடம் சொல்லி அழைத்து வர செய்தார். வந்தவர் எதுவும் பேசாமல் மெளனமாக நின்று அங்கிருப்பவர்களையே சுற்றி முற்றி பார்த்துக் நெளிந்து கொண்டிருந்தார். அவர் தன்னிடம் ஏதோ தனியாக பேச வேண்டும் என்று உணர்ந்த சரணானந்தா அனைவரையும் அங்கிருந்து செல்லுமாறு பணித்தார். அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
”இப்போது சொல்லப்பா, உனக்கு என்ன வேண்டும்? ஏன் எதுவும் பேசமால் இருக்கிறாய்? உனக்கு என்ன பிரச்சனை?” என வினவினார்.
வந்தவர் அடக்கி வைத்திருந்த சோகங்களை தன் அழுகையுடன் சேர்த்து வெளிப்படுத்தளானார். ”இல்லை குருவே, தனக்கு வாழவே பிடிக்கவில்லை. என்னை என் நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்தார் என எல்லோரும் எள்ளி நகையாடுகிறார்கள், உதாசினப்படுத்துகிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள். நான் மற்றவர்களை விட ஏழையாக இருப்பதால், என்னை ஒரு பொருட்டாகவே அவர்கள் கருதுவதாக இல்லை. அவமானத்தால் நான் கூனி கூருகி நின்றாலும், அவர்கள் மேன்மேலும் என்னை ஒரு குப்பையை தூக்கி எரிவதை போல் எரிந்து விடுகிறார்கள். எனக்கு மிகவும் அவமானமாக இருக்கிறது. செய்வதரியாமல் திகைக்கிறேன். எப்படி இந்த அவமானங்களை எதிர் கொள்வது என வழி புரியாமல் தத்தளிக்கிறேன்”. என்று மிக மன வருத்தத்துடன் கூறினார்.
சரணானந்தா அவரை பார்த்து, ”இதெல்லாம் சரி… உனது பிரச்சனை என்ன என்று நீ சொல்லவேயில்லையே?” என வினவினார்.
வந்தவர் சற்று சோகம் கலந்த ஆத்திரத்தில், ”என்ன சாமி நீங்க?!., என்னை எல்லோரும் அவமான படுத்துகிறார்கள், நான் கூனி கூறுகி நிற்பதாக கூறுகிறேன். இதை எல்லாம் கேட்டு விட்டு மறுபடியும் உன் பிரச்சனை என்ன என கேக்குறீங்களே?” என கேட்டார்.
”ஓ அப்ப இது தான் உன் பிரச்சனையா? அப்போ இது ரொம்ப சுலபமான விசயம் தான். உண்மையில் மற்றவர்கள் எல்லாம் நீ வாழ்க்கையில் மேலே வருவதற்க்கு உனக்கு உதவி தான் செய்கிறார்கள், நீ தான் அதை சரியாக புரிந்து கொள்ளவில்லை” என கூறினார் குரு.
”அப்படியா? என்ன சாமி சொல்றீங்க, எனக்கு ஒன்னுமே புரியலையே?”
”ஆமாம், நான் சொல்வதை கேள், புரியும்.
உண்மையில் நீ கூறியதை போல் ஒருவர் உன்னை அவமானப்படுத்தும் பொழுது, உன்னை ஒரு குப்பை என்று எண்ணி தூக்கிப்போடுவதாக தான் பொருள். அப்படி செய்வது என்பது ஒருவர் தன் விசையை உன் மீது பயன்படுத்துகிறார் என்று தானே அர்த்தம்?!. குப்பையை தூக்கி போடுவதற்க்கு கூட ஒரு விசை தேவைப்படும் இல்லையா?….
அவ்வாறு மற்றவர்கள் தன்னுடைய விசையை உனக்காக உபயோக்கிறார்கள் என்பது நல்ல விசயம் தானே?.. ஆனால் இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், அவர்கள் எண்ணியதை போலவே நீ உன் மனதை ஒரு காகித குப்பையை போல் வைத்திருக்கிறாய். அதனாலேயே அவர்கள் தூக்கி எரியும் போது நீ ஒரு காகித குப்பையை போல் விழ்ந்து, விழ்ந்த இடத்திலேயே வாழ்க்கையை தொலைக்கிறாய்.
நீ உன் மனதை காகித குப்பையாக அல்லாமல் ரப்பர் பந்தாக வைத்திருக்க முற்பட்டிருந்தால், என்ன ஆகியிருக்கும் என்று நினைத்து பார். ஒவ்வொரு முறையும் அவர்கள் உன்னை தூக்கி எறியும் போதும் நீ தரையில் விழுந்து உயரே மேலே எழலாம்.
அவர்கள் எவ்வளவு அதிக வலுவோடு உன்னை தூக்கி தரையில் எறிகிறார்களோ அவ்வளவு அதிகம் நீ மேலே உயரலாம்.அதனால், அடுத்தவர்கள் உன்னை தூக்கி எறிவதை பற்றி கவலைப்படாதே, நீ அவர்கள் எண்ணியதைப் போல் காகித குப்பையாக இல்லாமல் எப்படி ரப்பர் பந்தாக இருப்பது என்பதை பற்றி எண்ணிப்பார்.
அப்படி நீ பந்தாக இருந்தால், அவர்கள் விசையை கொண்டே நீ அவரை விட உயரே போகலாம். அப்படி இருப்பின், இனி உன்னை யாரும் தூக்கி எறியவே (அவமான படுத்தவே) அஞ்சுவார்கள்.
உண்மையில் அவமானங்கள் மனிதன் மனத்தை நிலை குலைய செய்யவே ஆற்றப்படுகிறது. ஆனால், அந்த அவமானங்கள் எப்படி எதிர் கொள்ளப்படுகின்றன என்பதை பொறுத்தே வெற்றி தோல்விகள் அமைகின்றன.
உன் அவமானங்களை எல்லாம் உன் வெற்றிக்கான படிக்கட்டுகளாக (காரணங்களாக) அடுக்கி வைக்க கற்றுக் கொள். அவை உன்னை வெற்றி எனும் படிக்கட்டுகளில் உயரே கொண்டு செல்லும்.
இதை நீ புரிந்து கொண்டால் இனி யாரும் உன்னை அவமான படுத்துகிறார்கள் என்று வருந்தமாட்டாய்.
இதை நீ மேலும் நன்றாக புரிந்து கொண்டாயேயானால், யாரையும் அவமான படுத்த வேண்டும் என நீயும் நினைக்க மாட்டாய். அப்படி செய்யும் பொழுது அவர்கள் வளர்ச்சிக்கு நீயே காரணமாய் ஆகிவிடுவாய்” என்று எடுத்துரைத்தார்.
நீங்கள் அவமானங்களை எப்படி எதிர் கொள்கிறீர்கள் – காகித குப்பையாகவா? அல்லது ரப்பர் பந்தாகவா?
chittoor.S.Murugesan
January 28, 2015 at 9:51 amசரண்
January 29, 2015 at 11:56 pmSUBA
January 28, 2015 at 3:58 pmசரண்
January 29, 2015 at 11:49 pmV. ANANTHA NARAYANAN
February 2, 2016 at 1:36 pm